தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தற்போது நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு கடந்த நவம்பர் மாதம் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் வைத்து நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து சமீபத்தில் மீண்டும் விஜய் பனையூரில் உள்ள அலுவலகத்தில் வைத்து முக்கிய மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது நடிகர் விஜய் நிர்வாகிகளுக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதாவது படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் ஒட்டப்படும் போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் அரசியல் வசனங்கள் இடம் பெற வேண்டாம் என்றும், பாலாபிஷேகம் போன்றவற்றை செய்ய வேண்டாம் எனவும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் விஜய் சொன்னதை வாரிசு படத்தின் ரிலீஸில் ரசிகர்கள் கடைபிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.