Categories
அரசியல் மாநில செய்திகள்

“இபிஎஸ் குடும்பத்துக்கே பிடிக்காத அரசியல் பண்றாரு”….. கூடிய விரைவில் கூடாரம் காலியாகும்….. ஓபிஎஸ் ஆதரவாளர் உறுதி….!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதியில் வைத்து ஓபிஎஸ் அணியின் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகு ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னால் அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் எங்களுடைய பக்கம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எங்கள் பக்கம் வருவதற்கான ஒரு காரணத்தை தான் அவர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கட்சி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மட்டும் வந்துவிட்டால் இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னால் அமைச்சர்கள் உட்பட பெரும்பாலான நிர்வாகிகள் எங்களுடைய பக்கம் வந்து விடுவார்கள். இபிஎஸ் பக்கம் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எல்லோரும் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். சரியான நேரம் வரும்போது தங்களுடைய ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்துவார்கள். ஓபிஎஸ் அணியின் சார்பில் விரைவாக பணத்திற்கு ஆசைப்படாத உண்மையான மற்றும் நேர்மையான நிர்வாகிகளின் கூட்டம் நடைபெறும்.

இபிஎஸ் பக்கம் இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும் கட்சி இல்லை என்றால் கண்டிப்பாக தங்களுடைய எதிர்காலமும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும். எனவே அவர்கள் எங்களுடைய பக்கம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. இபிஎஸ் கூடாரம் விரைவில் காலியாக போகிறது. மேலும் அவருடைய குடும்பத்தினரே விரும்பாத ஒரு அரசியலைத்தான் இபிஎஸ் செய்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |