Categories
உலக செய்திகள்

ரகசியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அரசியல்வாதிகள்… எழுந்த குற்றச்சாட்டுகள்… பதவியை இராஜினாமா செய்ய முடிவு…

கொரோனா தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பே அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெருவும் ஒன்று. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் பெருவில் உள்ள சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முன்னரே பெருவின் அரசியல் தலைவர்கள் சிலர் கொரோனா தடுப்பூசியை ரகசியமாக எடுத்துக்கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

ஏனென்றால் நாட்டின் சுகாதார அமைச்சர் முன்னதாக தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் கடந்த வாரம் தன் பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் ஜனாதிபதியும் கடந்த அக்டோபர் மாதம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வெளிவிவகாரத் துறை அமைச்சரான எலிசபெத்தும் தன் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் தனது இரண்டாவது டோசை எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |