அரசியல் – நாட்டின் ஜனநாயகத் தூண்களின் முதலாவதும் முக்கியமானதும் ஆகும். அரசியலே அரசாங்கத்தையும், ஆட்சியையும் முடிவு செய்கிறது. நாட்டின் ஒவ்வொரு நிகழ்விலும், மக்களின் ஒவ்வொரு அசைவிலும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. இப்படி மக்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய, நாட்டின் நடப்பை நிர்ணயிக்க கூடிய அரசியலை எத்தனைபேர் மதிப்புமிக்க ஒரு சேவையாக பணியாற்றி கருதுகின்றனர். அதிகாரத்தின் மேல் கொண்ட பயத்தாலும் தன் மேல் கொண்ட தீராத தாகத்தாலும் அரசியலை ஒதுக்கி வைத்து பார்வையாளர்களாகவே பலர் இருந்துவிட்டு போக பார்க்கின்றனர் காரணம் எதுவாக இருந்தாலும் அரசியல் என்ற அமைப்பின் மீது மக்களின் மதிப்பும் ஈடுபாடும் கூட வேண்டியது அவசியம் இது இளைய சமுதாயத்தை அரசியலின் பால் ஈர்ப்பதற்கும் நாடு வளம் பெற்று விளங்குவதற்கும் இன்றைய முக்கியத் தேவையாகிறது.
மனித நாகரிகம் தோன்றியதிலிருந்தே அரசியல் என்ற அமைப்பு உருவாகி விட்டது. நாடு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் நம் தலைவர்கள் ஆங்கிலேயர்களின் அரசியலமைப்பை ஒதுக்காமல் அதில் பங்கேற்றனர் என்பதை அனைவரும் அறிவோம். அன்றைய அரசியல், சுதந்திரப் போராட்டத்திற்கு மக்களின் மேம்பாட்டிற்கும் முதன்மை அளித்து அதை அடையும் வழியாக அதிகாரம், அரசாங்கம் போன்றவற்றைக் கருதியது போல் என்றும் அது தொடர்ந்திருந்தால் மக்களுக்கு அரசின் மேல் ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை தடுத்திருக்கலாம் இடையே காலத்தின் மாற்றத்தாலும் செயல்படும் விதத்தாலும் தரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்திருக்கலாம்: நன்மை தீமை நடந்திருக்கலாம் நல்லவை கெட்டவை உட்புகுந்து இருக்கலாம் ஆனால் அதற்காக அரசியல் என்பது சாக்கடையா என ஒதுக்கித் தள்ளி வைக்கக்கூடாது: முடியாது.
நாடு என்பது இருக்கும் வரை அரசியலமைப்பு என்பதும் இருந்தே தீரும்: இருந்தே ஆக வேண்டும். இல்லையெனில் நாட்டில் கலவரங்களும், சட்ட ஒழுங்கு சீர் கேடுகளும் தான் ஏற்படும் இதற்கு உதாரணம் காண சோமலியா நாடு வரை செல்ல வேண்டாம் நம் அண்டை நாடுகள் சிலவற்றில் நிலை கண்டு உணரலாம் இப்பட்டியலில் சேராமல் வல்லரசாக வாய்ப்புள்ள நாடு என்ற நிலையில் நாம் இருப்பதற்கு மக்களின் உழைப்பும் நீதித்துறையும் அரசுப் பணித் துறை ஊடகத்துறை ஆகிய பிற ஜனநாயக ஜனங்களின் துணையுமே காரணம்.
‘அரசியல் சாக்கடை’ என்றும், ‘அரசியல்வாதிகள் தீண்டத்தகாதவர்கள்’ என்றும் நினைப்போர்,’அரசியல் அமைப்பும்’ அரசியல்வாதிகளும் இந்த சமுதாயத்தின் உருவாக்கமே என்பதை மறந்துவிடக்கூடாது. இங்கு அலசப்படும் கருத்துக்கள், அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கு அல்ல, அரசியல் அமைப்பின் தேவைகளையும் முக்கியத்துவத்தையும் அறிய வைப்பதற்கும் அரசியலை வெளியிலிருந்து விமர்சித்து செல்வோரை அந்த பணியில் ஈடுபட தூண்டுவதற்கும் ஆகும். கேள்வி கேட்பதற்கும் குறை கூறுவதற்கு மக்களுக்கு அதிக உரிமை உண்டு. அதைவிட அவர்களின் தலையாய கடமை தவறி நேரிடும்போது தேவை ஏற்படும் போதும் முன் நின்று காண விரும்பும் மாற்றத்திற்கு முதல் கல்லை எடுத்து வைப்பது தான். அது சாக்கடை என்று கருதினால் தேவையை சேவை என கருதி கீழே இறங்கி சுத்தம் செய்வதுதான் சரியான அணுகுமுறையை தவிர அதிலிருந்து ஒதுங்கி நிற்பதல்ல.
மக்கள் அனைவரும் ‘அரசியல் ‘ என்பது , அவசியம் என்பது சமுதாயத்தின் ஒரு முக்கியமான அங்கம் என்பதை உணர வேண்டும்: அதை மேம்படுத்த தங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும். அன்பளிப்பு நேர்முகமாக அரசியலில் ஈடுபடுவதாகவும் இருக்கலாம் அல்லது , அரசியலை சமூகப்பணி அவமானம் பூர்வமாக அதிகம் அங்கீகரித்து மதிப்பளித்து சமூக நலம் நாடுபவராக தலைமுறையினர் அருட்பெரு விரும்பி ஏற்க வழிவகை செய்வதாகம் இருக்கலாம்.
இளைய சமுதாயம் நாளைய இந்தியாவை உருவாக்கும் பெறுவதில் இருக்க வேண்டுமெனில், ஓர் ஆசிரியராகவும் , மருத்துவராகவோ , பொறியாளராகவோ மட்டுமல்லாமல், அவர்களது எல்லா வகைக்கும் அரசியலமைப்பின் இயந்திரத்தை இயக்குபவராகாக சட்டங்கள் எதிராக பாராளுமன்றத்திலும் , கட்டமைத்து சட்டமன்றத்திலும் இடம் பெற்றிருந்தாலேயே அது சாத்தியமாகும். பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட உதவும் கரங்களை நாட்டின் தேவை என உணர்ந்து இளைய தலைமுறை அரசியல் பணி தயார் ஆனால் நம் நாடு உலகிற்கு ஒரு தளமாக மாறுவது உறுதி.
அரசியல் சமுதாயத்தின் இன்றியமையாத அங்கம் !
அதை சேவையான செய்வோர் தேசத்தின் தங்கம் !