Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

எப்போதும் ஜெயலலிதா மட்டும்தான்… ஒருங்கிணைப்பாளர் கூறிய குற்றங்கள்… மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்…!!

அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் என்றும், மற்றவர்கள் சுயநலத்திற்காக செயல்படுகின்றனர் என்று கே.பி முனுசாமி கூறியிருக்கிறார்.

பெங்களூரு சிறையில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி முறைப்படி விடுதலையானார். ஆனால் இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருந்த காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணமடைந்த பின் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெளியே வந்துள்ளார். இந்நிலையில் சசிகலா காரில் வந்து கொண்டிருந்த போது, அவரது காருக்கு முன்னும் பின்னும் பல கார்கள் அணிவகுத்து வந்து கொண்டிருந்தன.

மேலும் அவரது காரில் அ.தி.மு.க கொடி பொருத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி கூறும்போது, அ.தி.மு.க-வின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் தான் என்றும், மற்றவர்கள் தங்களின் சுயநலத்திற்காக செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் அ.தி.மு.க-வை சாராத சசிகலா அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது என்றும் கூறியுள்ளார்.

அதோடு அ.தி.மு.க-வை கைப்பற்றும் எண்ணத்தில் பல்வேறு கோணங்களில் டி.டி.வி தினகரன் முயற்சி செய்து வருவதாகவும், தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தன்பக்கம் இருப்பவர்களை ஏமாற்றி வருகிறார் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே டி.டி.வி தினகரன் அ.தி.மு.க-வுக்கு எதிராக செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும், மன்னிப்பு கடிதம் தந்தால் மட்டுமே அ.தி.மு.க தலைமை இது குறித்து பரிசீலனை செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |