பொலிவியாவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பொலிவியாவின் டரிஜா நகரில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் சாலைகள் மற்றும் குடியிருப்புகள் மீது சுமார் 5 அடி உயரத்திற்கு ஆலங்கட்டிகள் குவிந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இவ்வாறு சாலைகளில் இருந்து 5,000 டன் எடையிலான ஆலங்கட்டிகள் அகற்றப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பலத்த மழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.