இறந்தவரின் முகநூல் மூலம் பணம் கேட்ட மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி பகுதியில் ஆலவயல் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். மேலும் முன்னால் எம்.எல்.ஏ-வான இவர் ஒரு வருடத்திற்கு முன்பே இறந்துவிட்டார். இந்நிலையில் இவரது மகன் ஆலவயல் முரளி சுப்பையா தனது தந்தையின் முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதனையடுத்து ஆலவயல் சுப்பையா என்ற பெயரில் மர்ம நபர்கள் போலி கணக்கு ஆரம்பித்து பணம் கேட்டு நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியதை முரளி பார்த்துள்ளார்.
இதுபற்றி முரளி சுப்பையா தனது தந்தையின் பெயரில் போலி கணக்கு வைத்து உபயோகித்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.