கலெக்டர் அலுவலகம் முன்பாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் பதவியை எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வேறு சமூகத்தைச் சேர்ந்த வினிதா என்பவர் பொய்யான ஜாதிச் சான்று பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதாகவும், அவரின் ஜாதிச் சான்றிதழை ரத்து செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக ரிஷிவந்தியம் பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அவர்களின் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது, ஊராட்சி மன்ற தலைவர்ப் பதவிக்கு எஸ்.சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 6-ஆம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேறு சமூகத்தைச் சேர்ந்த வினிதா என்பவர் எஸ்.சி எனச் சான்று பெற்று ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதனால் அவரது ஜாதி சான்றிதழ் உண்மை தன்மை குறித்து அறிந்து, பின் அவரின் ஜாதி சான்றை ரத்து செய்ய வேண்டுமெனவும், அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.