கோவை புறநகர் மாவட்டம் பொள்ளாச்சி நகரத்தை சேர்ந்த அதிமுகவின் A.நாகராஜ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார் என்று அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது .
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , கழகத்தின் கொள்கை- குறிக்கோள் , கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்தில் களங்கமும் அவப் பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் கோவை புறநகர் மாவட்ட பொள்ளாச்சி நகரைச் சேர்ந்த நாகராஜ் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.