பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்று மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
பொள்ளாச்சியில் பாலியல் கும்பல் நடத்திய அட்டூழியம் கடந்த மாதம் ஒரு பெண் கொடுத்த புகாரில் தான் வெளிவந்தது . பாதிக்கப்பட்ட பெண் அந்த கும்பலிடம் முழுமையாக சிக்குவதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வந்து இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவரிடம் நடத்திய விசாரணையில் 4 பேர் கொண்ட பாலியல் கும்பல் சிக்கியது. இவர்கள் வெளியிட்ட வீடியோ தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் , கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது .
மேலும் இந்த சாம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழகம் முழுவதும் மாணவர்கள் , அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு கொடூரமான தண்டனை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வருகின்றது.
இந்நிலையில் இந்த வழக்கை தமிழக அரசு CBCID போலீசார் வசம் ஒப்படைத்தது . இந்த போராட்டத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததை கருத்தில் CBCID போலீஸ் வசம் ஒப்படைத்த வழக்கை சில மணி நேரங்களில் CBI வசம் ஒப்படைத்துள்ளது தமிழக அரசு மேலும் அதற்கான அரசனையையும் தமிழக அரசு வெளியிட்டது. இது குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில் இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் பயன்படுத்திய பேஸ்புக் மற்றும் I.P அட்ரஸ்ஸை தொழில்நுட்ப ரீதியாக பெறுவதற்கு மாநில புலனாய்வு அமைப்பால் தகவலை பெற முடியாது . மத்திய புலனாய்வு அமைப்பு தான் விசாரிக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.