பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து பணத்தை பறித்த பிரபல குற்றவாளியான காசி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பல பெண்கள் காசி மீது புகார் அளித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்பலமானதை பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 3 பெண்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.