Categories
மாநில செய்திகள்

பொள்ளாச்சி சம்பவம் மிகப்பெரிய அவமானம் , தலைகுனிவு ……. திருமாவளவன் கண்டனம்….!!

பொள்ளாச்சி சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் மற்றும் தலைகுனிவு என்று திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . மேலும் இந்த இரண்டு தொகுதிகள் எவை எவை என்பது குறித்து நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினரோடு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்று முடிவு செய்யப்பட்டது . இன்றோ அல்லது நாளையோ திமுக தலைவர் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகளை கட்சி போட்டியிடும் தொகுதிகள் எவை என்று அறிவிக்க இருக்கின்றார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் தொல் .திருமாவளவன் கூறுகையில் , பொள்ளாச்சியில் இளம்பெண்களை மயக்கி மிக மோசமான முறையில் பாலியல் வல்லுறவு கொண்டு இருக்கிறார்கள் , வன்கொடுமை சென்றிருக்கிறார்கள் . இது தமிழகத்திற்கு மிகப்பெரிய அவமானம் , தலைகுனிவு . இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு  தயங்க கூடாது . குற்றவாளிகளை  ஆளுங்கட்சி தரப்பில் பிணையில் எடுக்க நடவடிக்கை எடுப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது .இந்த சம்பவத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வருகிற 14-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |