பொள்ளாச்சி சம்பவம் பதட்டத்தை உண்டாக்குகின்றது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் .
இந்நிலையில் இன்று சென்னை D.G.P அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் கூறுகையில் , பொள்ளாச்சி சம்பவங்களைக் குறித்து தொடரும் செய்திகளும் , பரவும் செய்திகளும் எங்களுக்கு பதட்டத்தை அளிக்கிறது . எங்களை விட பொள்ளாச்சி தொடர்ந்து பதட்டமாகி கொண்டிருப்பதை DGP-யிடம் முறையிட்டோம் .
மேலும் கமல் கூறுகையில் , பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் பெயர்கள் போன்றவற்றை செய்திகளில் போடவேண்டாம் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் , முகங்கள் வராமல் இருக்க வேண்டும் . சமூகவலைத்தளங்களில் பேசுபவர்கள் எல்லோரும் சட்டம் தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பு இல்லை . உத்வேகத்தில் கோபத்தில் வெட்டு , குத்து என்று பேசுவதெல்லாம் சட்டத்தை செயல்படுத்த முடியாது மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டது தவறானது என்றும் அவர் கூறினார்.