சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து வந்த இவ்வழக்கை தமிழக அரசு சிபிசிஐடிக்கு மாற்றியது இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல்துறை தரப்பில் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்து வருகிறது இந்நிலையில் தற்போது வரை முறையான எந்த ஒரு விசாரணையும் நடைபெற வில்லை
இதனை தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட மெகா கூட்டணி பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர்நீதிமன்றம் நீதிபதிகளின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் அந்த தீர்மானத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை கடந்த ஏழு வருடங்களாக ஆளுங்கட்சியின் துணையுடன் நடைபெற்று வருகிறது இந்த கொடிய குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றால் தான் முழுமையான நீதி கிடைக்கும் இதனையடுத்து இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது புகார்களை அளிக்க தயங்கிய சூழலில் அவர்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அளிக்க வேண்டிய அரசும் காவல்துறையும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பெயர் விபரங்களையும் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது பாதிக்கப்பட்டுள்ள பெண்களை புகார் அளிக்க விடாமல் தடுக்கும் செயல்முறையாகும் ஞாயம் கேட்டு போராடும் மாணவ மாணவியர் மீது காவல் துறை தாக்குதல் நடத்துவது கண்டனத்துக்குரியது மேலும் இந்த வழக்கு தொடர்பான காணொளியை வெளியிட்ட நக்கீரன் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது ஜனநாயகத்திற்கு எதிரான செயலாக கருதப்படுகிறது இவையாவும் உண்மையை மறைப்பதற்கான முயற்சிகள் என்பது தெளிவாக தெரிகிறது
இதற்கு உண்மையான தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் சிலை கடத்தல் வழக்கு போன்றவற்றில் நீதித்துறை காட்டுகின்ற கவனத்தை பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் எந்த வகையிலும் குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று கூறப்படுகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மேலும் இந்த தீர்மானத்தை செயல்படுத்தும் விதமாக அதனை நிறைவேற்ற கோரி போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்