Categories
மாநில செய்திகள்

“பொல்லான் பிறந்த நாள் அரசு விழா”… முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!!

சுதந்திர போராட்ட வீர‌ர் பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இந்திய சுதந்திரப் போரில் வரலாற்றுப் பதிவாக கொங்கு மண்டலத்தில் இருப்பது தீரன் சின்னமலை ஆங்கிலப் படைகளை எதிர்த்து நடத்திய போர். இந்த தீரன் சின்னமலையின் போர் படையில் முக்கிய தளபதியாக இருந்தவர்தான் பொல்லான். பொல்லான் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டது. ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதால் அரசு அலட்சியப்படுத்துகிறது என்ற குரல்களும் எழுந்தது. முதலமைச்சரிடம் பல்வேறு அமைப்பு சார்பில் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன.

இந்நிலையில் சுதந்திர போராட்ட வீர‌ர் பொல்லான் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். பொல்லான் வீரத்தை போற்றும் வகையில் அவருக்கு முழு திருவுருவ சிலை மற்றும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |