Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பெட்ரோல் போட போன மேலாளர்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கல்லூரி மேலாளர் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் போது தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னகம்மியம்பட்டு பகுதியில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி சாந்தி என்ற மனைவியும், பிரதீப், ராகவன் என 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் ராஜா தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த நிலையில் தீப்பொறி பறந்து வந்து அவரின் மேல் விழுந்ததில் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த ராஜாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் மது போதையில் இருந்த போது இரு சக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டு இறந்தாரா இல்லை தற்கொலை செய்து கொண்டாரா எனவும், இதில் மர்மம் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |