சென்னை அடுத்த வேங்கடமங்கலம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கண்ணன்-பார்வதி தம்பதி மகன் முகேஷ் (19). இவர் அதே ஊரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவருகிறார். அதே ஊர் பார்கவி தெருவைச் சேர்ந்தவர் விஜய் (19). இருவரும் ஒரே கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துவருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
இந்நிலையில், இன்று முகேஷ் வீட்டிற்குச் சென்ற விஜய் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து தான் மறைத்துவைத்திருந்த துப்பாக்கியால் முகேஷின் நெற்றிப் பொட்டில் சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த முகேஷ் உயிருக்குப் போராடிவந்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது குறித்து விஜய்யின் நண்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.