அழகான பார்பி பொம்மை ஒன்றை தனது பாட்டிக்கு அளித்த பேத்தியின் நெகிழ்ச்சியான சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது
நாம் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான, அழகான மற்றும் சோகமான சம்பவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது என்பது இன்றியமையாத நிகழ்வாகிவிட்டது. இதனை அடுத்து அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான தருணம் ஒன்று ட்விட்டரில் வீடியோவாக வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் டோனா கார்மோசா என்ற பாட்டிக்கு அவரின் பேத்தி பார்பி பொம்மை ஒன்றை அன்பாக பரிசளித்துள்ளார். அதை பிரித்து பார்த்த அவர் மிகவும் நெகிழ்ச்சியாக பேத்தியை ஆரத்தழுவி முத்தமிட்டுள்ளார். மேலும் அந்த பாட்டி கூறியதாவது “நான் வாழ்நாள் முழுவதும் ஒரு பார்பி பொம்மையை பெற விரும்பினேன்” என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அனைவரையும் உருகச் செய்துள்ளது.