அமெரிக்காவில் குழந்தைக்கு வாங்கிய பொம்மைக்குள் 5,000 போதை மாத்திரைகள் இருந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளுக்கு கடையில் பொம்மை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த பொம்மை ஏற்கனவே மற்றொருவர் பயன்படுத்தியது (second-hand) என்பதால் குழந்தையின் தாய் அதனை கழுவி சுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளார். பின்பு அந்த பொம்மையை கழுவும் பொழுது பொம்மைக்குள் இரண்டு கவர்கள் இருப்பதை அவர் கவனித்துள்ளார்.
பின்னர் தனது கணவனை அழைத்து கவருக்குள் பார்த்தபோது உள்ளே மாத்திரைகள் இருந்து உள்ளது. அவை போதை மாத்திரை தான் என்பதை அறிந்து கொண்ட தம்பதியினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மாத்திரைகளை பறிமுதல் செய்ததில் 5000 போதை மாத்திரைகள் இருந்தது தெரியவவந்தது.
மேலும் காவல்துறையினர் அந்த தம்பதியரை மனதார பாராட்டினர். ஒருவேளை குழந்தை அந்த போதை மாத்திரைகளை தெரியாமல் உட்கொண்டிருந்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருந்திருக்கும். அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டில் மட்டும் 40000பேர் அதே வகை போதை மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.