கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொம்மலாட்ட கலைஞர்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் அதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி தற்போது தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது.
இதனால் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையிலிருந்தே ஊரடங்கு காரணமாக பொம்மலாட்ட கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் வாடி வருகின்றனர்.
இவ்வாறு ஒரு வேளை உணவுக்குக் கூட கஷ்டப்படும் நிலையில் இருக்கும் தங்களுக்கு அரசு நிவாரணம் நிதி வழங்க வேண்டும் என மயிலாடுதுறை பொம்மலாட்ட கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.