Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு : பொங்கலுக்கு பின்…..? வெளியான புதிய தகவல்…!!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை முழுமையாக திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குவதில் இன்னும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு பள்ளிகளை திறக்கலாம் என அரசு தரப்பிற்கு பள்ளிக் கல்விதுறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதியும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதியும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும்,  கல்வி அமைச்சர், முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

Categories

Tech |