பொங்கல் பண்டிகையின் மறுநாள் ஜனவரி 16-ம் தேதி பிரதமர் மோடியின் கலந்துரையாடளை கேட்பதற்காக மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்று எந்த உத்தரவும் பிறப்பிக்கபடவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இந்நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதற்காக பள்ளிகளில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜனவரி 16-ம் தேதி அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் மாட்டுப் பொங்கல் என்பதால் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இவ்விடுமுறை ரத்து செய்யப்படுமோ? என்ற சந்தேகம் எழுந்தது.
இதுபற்றி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, பொங்கலுக்கு மறுநாளான ஜனவரி 16-ம்தேதி மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என எந்த உத்தரவும் இல்லை என்றார்.
அன்றைய தினம் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டியது கட்டாயமில்லை. பிரதமரின் பேச்சை மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே கேட்கலாம் .
‘ விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது’ என்று அமைச்சர் கூறினார்.