Categories
கோயம்புத்தூர் சென்னை சேலம் திண்டுக்கல் திருவண்ணாமலை நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

பொங்கல் பொருட்கள் விலை கிடுகிடு உயர்வு ….!!

பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்கள், பழங்கள், வாழைத்தார் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடை பெற்று வரும் நிலையில் அவற்றின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விபரங்கள் வருமாறு:

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பூ சந்தை யில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள் ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலை யில், பனிப்பொழிவு, வெயில் காரணமாக வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஆயிரத்து 200 ரூபாய்க்கும், முல்லைப்பூ ரூபாய் 500 ல் இருந்து 800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் சாமந்திப்பூ கிலோ ரூபாய் 40 ல் இருந்து 120 ரூபாயாகவும், பட்டன் ரோஸ் ரூபாய் 70 ல் இருந்து 200 ரூபாயாகவும், கனகாம்பரம் ரூபாய் 500 ல் இருந்து ஆயி ரத்து 500 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உழவர் சந்தை உள்ளிட்ட 3 சந்தைகளில் காய்கனிகள் மற்றும்  பொங்கல் பொருட்கள் விறுவிறுப்பாக விற்பானையாகிறது. பொங்கல் வைக்க புதுப்பானை, வண்ணக் கோலமாவு, கரும்பு, மஞ்சள், பழங்கள், காய்கனிகள் உள்ளிட்ட  பொருட்களை அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச்சென்றனர்.  காய்கனிகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து குறைவால் மூன்று மடங்கு விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சந்தையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை உயர்ந்துள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விற்பனைக்காக திங்களன்று 5 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வாழைத்தார்களை விவசாயி கள் சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர்.  இங்கு கடந்த வாரம் ரூபாய் 400 க்கு விற்கப்பட்ட பூவன் வாழைத்தார் திங்களன்று 700 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்கப்பட்ட ரஸ்தாலி 500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இதே போல் பச்சைநாடன், கற்பூரவள்ளி ஆகியவற்றின் விலை தார் ஒன்றுக்கு ரூபாய் 50 வரை அதிகரித்து விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மதுரை

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் டில் பொங்கலையொட்டி பூக்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ  2 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ இரு மடங்கு அதிகரித்து 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான முல்லைப் பூ 2 ஆயிரம் ரூபாயாகவும், 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ, ஆயிரத்து 500 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. மேலும் செவ்வந்தி, ரோஜாப்பூ ஆகியவை 200 ரூபாய்க்கும், அரளி பூ 300 க்கும், கனகாம் பரம் ஆயிரத்து 500 க்கும், சென்னை மல்லி ஆயிரத்து 800க்கும் விற்பனையாகிறது.

சென்னை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரிப்பின் காரணமாக பொங்கல் கரும்பு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கட்டு கரும்பு 350 ரூபாய்க்கு  விற்ற நிலையில்,திங்களன்று 150 ரூபாய்க்கு விற்பனை ஆனது. விளைச்சல் அதிகரிப்பால்  250 லாரிகளில் கரும்புகள் வந்து குவிந்துள்ளது. தொடர்ந்து வெளியூர்களில் இருந்து வந்து கொண்டு இருப்பதால், இதே நிலை தொடர்ந்தால் இன்னும்  விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் பூ சந்தையில் பொங்கல் பண்டிகையை யொட்டி பூக்களின் தேவை அதிகரிப்பால் அவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மல்லிகைப்பூ கிலோ 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் மற்றும் முல்லை கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், காக்கட்டான் ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 500 ரூபாய்க்கும் விற்பனையானது.  மேலும் ஜாதி மல்லிகை கிலோ ரூபாய் 1500, சம்மங்கி ரூபாய் 150, செவ்வந்தி ரூபாய் 90, அரளி ரூபாய் 200 என விற்பனையானது.

கோவை

கோவையில், கடை வீதி மற்றும் சந்தை களில் புத்தம் புதிய பொங்கல் பானை, கரும்பு, வண்ண கோலப்பொடி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை களை கட்டி யுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மஞ்சள் கொத்து, வெற்றிலை, எலுமிச்சை, தேங்காய், வாழை உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்திருப்பதால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் செல்கின்றனர். மேலும் கடந்த ஆண்டு ஒரு ஜோடி கரும்பு ரூபாய் 250க்கு விற்ற விலையில், தற்போது ஒரு ஜோடி100 ரூபாயாக குறைந்துள்ளது. அதே சமயம் கோவையில் பூக்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதி கரித்துள்ளது. மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 4 ஆயிரத்துக்கு விற்கப்படுவதால் ஒரு முழம் 150 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கேட்டு பெண்கள் அதிருப்தியுடன் சென்றனர். சாமந்திப் பூ ஒரு முழம் 40 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரையில் விற்பனையாகிறது.

சேலம்

சேலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானை, கரும்பு, மஞ்சள் கொத்து, காப்பு கட்டும் செடிகள் விற்பனை முமுரமாக நடைபெற்று வரு கிறது. சுற்று வட்டார கிராமங்களில் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள், அம்மாபேட்டை, பட்டை கோவில், அழகாபுரம், சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி, அன்னதானபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேரடியாக கரும்பு கட்டு களை குவித்து வைத்து விற்பனை செய்கி றார்கள். இதனால் விலை குறைந்து ஒரு ஜோடி கரும்பு ரூபாய் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Categories

Tech |