Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி…. சென்னை – கோவை சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகிற 12, 13ம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

மேலும் 16, 17ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் வருகிற 11ம் தேதி இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் சென்னையில் இருந்து கோவைக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 17ம் தேதி இரவு 8 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Categories

Tech |