பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியதற்கான காரணத்தை முதல்வர் பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினை சேர்ந்தவர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது பொங்கல் பண்டிகையொட்டி பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அதிரடியாக புதிய ஒரு அறிவிப்பை அறிவித்தார். இது குறித்து ஸ்டாலின் அவர்கள் கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது ஏன் நிவாரணம் தரவில்லை? .
ஆனால் தேர்தல் நெருங்கும் போது சுயநலத்துக்காக முதல்வர் பொங்கல்பரிசு அறிவித்துள்ளார் என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனவே சுயநலத்தின் மொத்த உருவமே முதல்வர்தான் என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து கொரோனா, புயல் என மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் பொங்கல் பரிசை உயர்த்தி வழங்குகிறோம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது தவறா? என்று பொங்கல் பரிசு குறித்து விமர்சித்த ஸ்டாலினுக்கு முதல்வர் பதிலளித்துள்ளார். மக்கள் குறிப்பறிந்து சூழலுக்கு ஏற்ப வழங்குவதை சுயநலம் என சொல்வது நியாயமில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.