பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று வாங்காவிட்டால் பரிசுத்தொகை கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவர் புயல் மற்றும் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் வீடு வீடாக சென்று நியாய விலை கடை ஊழியர்கள் டோக்கன் வினியோகம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசு ரூபாய் 2500 வழங்க மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
கடந்த தேதி முதல் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் டோக்கன் வினியோகம் செய்யும் பணி நிறைவடைகிறது. இன்றுக்குள் டோக்கன் வாங்காத மக்களுக்கு முதல்வர் அறிவித்த 2500 ரூபாய் கிடைக்காது. ஜனவரி 4 முதல் 12 ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாயுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்பட உள்ளது.