இயக்குனர் தங்கர் பச்சான் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், நிலத்துடன், கால்நடைகளுடன், பிறந்த ஊருடன், உறவுகளுடன், நண்பர்களுடன், குலசாமி கோவில்கள் உடன் இருந்து வரும் பிணைப்பை புதுப்பித்துக்கொள்ளும் திருநாள் இது. உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகளுக்கு நானும், எனது குடும்பத்தினரும் பொங்கல் வாழ்த்துக்களை கூறி கொள்வதில் அகம் மகிழ்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.