பள்ளித்தோழிகள் 10 பேர் பொங்கல் விடுமுறையை கொண்டாட சென்றபோது பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளி – தர்வாத் பைபாஸ் ரோட்டில் டிரக்கும், டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளன. மணல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் லாரி முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றபோது எதிரில் வந்து கொண்டிருந்த டெம்போ வேன் பயங்கர வேகத்தில் மோதியுள்ளது. இதில் டெம்போவில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியாகியுள்ளனர்.
இது குறித்த விசாரணையில் இவர்கள் அனைவருமே பள்ளிக்கூட தோழிகள் என்பதும், பொங்கல் விடுமுறையை கொண்டாட கோவா சென்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. அப்போது காலை உணவை சாப்பிடுவதற்காக புறப்பட்டு சென்றபோது இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் சுற்றுலா செல்வதற்கு முன்பு டெம்போவில் உட்கார்ந்தபடியே செல்பி எடுத்து வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.