Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தயாராகும் கோலப்பொடி ….. தயாரிப்பு பணிகள் மும்மரம்….. களைகட்டும் தர்மபுரி …!!

பொங்கல் பண்டிகையையொட்டி பல வண்ண கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிர ஆர்வம்காட்டி வருகின்றனர்.

ஆண்டுதோறும் மார்கழி மாத கடைசி நாளில் சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்ய பெண்கள், மார்கழி முதல் நாளிலிருந்து பிள்ளையார் வைத்து மாதம் முழுவதும் வித விதமான கோலமிட்டு வண்ணமிடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மார்கழி மாதம் தொடங்கிய நிலையில், மார்கழி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி தருமபுரியில் பல வண்ணங்களில் கோலப்பொடிகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி அருகே பழைய தருமபுரி, ஏ.கொள்ளஅள்ளி, குண்டல்பட்டி உள்ளிட்ட இடங்களில் குடிசை தொழிலாக 50க்கும் மேற்பட்டோர் அரவை ஆலைகளில் 10-க்கும் மேற்பட்ட வண்ணங்களில் கோலப்பொடிகளை மரவள்ளி கிழங்கு மாவு மூலம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர்.

தருமபுரியில் தயாரிக்கப்படும் வண்ண கோலப்பொடிகள் அம்மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் பெங்களூரு, திருப்பதி போன்ற வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |