Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“களைகட்டும் பொங்கல் “அறுவடைக்கு தயாரான மஞ்சள் குலைகள்…. விவசயிகளின் கோரிக்கை….!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.  

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் தங்களது படைப்புகளை படைத்து புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் புதுப்பானையில் பொங்கலிட்டு மகிழ்வார்கள். அவைகளில் மஞ்சள் குலையும் முக்கிய இடம்பெறும்.கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியில்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  விவசாயிகள் மஞ்சள் பயிரிட்டுள்ளனர். அவைகள் 6 மாத கால வளர்ச்சிக்கு பின்னர் பயிரான மஞ்சள் குலைகள் அறுவடைக்கு தயாராக உள்ளன.

ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் வரையிலும் செலவு செய்து மஞ்சள்குலைகள்  பயிரிடப்பட்டு  ,  அவைகளை  அறுவடை செய்து கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு விற்பனை செய்ய அனுப்பப்படுகின்றன. ஒரு மஞ்சள் குலை ரூபாய் 20 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறினார்கள்.மேலும் ,அடுத்த ஆண்டிலாவது ரேஷன் கடைகளில் கரும்புடன் மஞ்சளையும் சேர்த்து வழங்கினால் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என  அவர்கள் தெரிவித்தனர்

Categories

Tech |