தமிழகத்தில் திமுகவினருக்கு மக்களுக்கு நல்லது செய்வதே பிடிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் அவர் மக்களின் மத்தியில் பேசினார். அதில், நாமக்கல் மாவட்டம் மிகவும் ராசியான மாவட்டம். இந்த மாவட்டத்திற்காக அ.தி.மு.க. பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. நாமக்கல் மாவட்ட மக்களின் அன்பைப் பெற்ற அரசு அம்மாவுடைய அரசு மட்டும் தான். இன்றைய அம்மாவின் அரசு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, கடைக்கோடியில் வாழ்கின்ற மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு அம்மாவுடைய அரசு மட்டுமே.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்படுகின்ற மக்களின் சூழ்நிலையை அறிந்து வரும் தை மாதம் தை பொங்கலை முன்னிட்டு அத்திருநாளை அனைவரும் அவரது இல்லங்களில் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக, அம்மாவின் அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 2500 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டிருக்கிறோம். அதனுடன் முழுக் கரும்பு, பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி நீங்கள் இந்த பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக இத்திட்டத்தை அரசு செயல்படுத்தி இருக்கிறது.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று முயற்சிக்கிறார். அதற்காக அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்குகிறார்கள் என்று ஒரு பொய்யான வதந்தியை தி.மு.க.வினர் பரப்பி வருகிறார்கள். இது எதற்காக என்றால், இத்திட்டம் மக்களிடத்தில் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. இத்திட்டம் மக்களுக்குப் போய் சென்று விட்டாள் அதிமுகவுக்கு நல்ல பெயர் வந்துவிடும்.
ஆகவே எப்படியாவது இதனை தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். மக்களுக்கு நல்லது செய்வது எதுவுமே தி.மு.க.வுக்கு பிடிக்காது. பாதிக்கப்பட்ட மக்கள் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக வருகின்ற 4ஆம் தேதி முதல் இத்திட்டம் செயல்படுத்தப்படும். எனவே இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து மகத்தான வெற்றியை தேடித் தாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் பிரச்சாரத்தில் பேசினார்.