பொங்கலன்று வண்டலூர் பூங்காவிற்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு மது, புகையிலை, கரும்பு உள்ளிட்டவற்றை உள்ளே எடுத்து வர அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கத்திற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு முன்பே 8 மணி அளவில் திறக்கப்படும் என்றும், மாலை 6 மணி வரை பூங்கா திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வண்டலூர் பூங்காவிற்கு வருகை தரவுள்ள சுற்றுலா பயணிகள் தங்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை www.aazp.com என்ற இணையதளத்திலும் வண்டலூர் உயிரியல் பூங்காவின் பிரத்யேக செயலியிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் மூலம் நேரில் டிக்கெட் பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு வசதிகளை மேற்கொண்ட பாதுகாப்பு துறையினர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியுள்ளனர். மேலும் சிறுவர் சிறுமியர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களது கைகளில் tag கட்டும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் மது, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொங்கல் பண்டிகை என்பதற்காக கரும்பு உள்ளிட்டவற்றையும் உள்ளே கொண்டுவர அனுமதி கிடையாது என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இவை அனைத்தும் வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.