பொங்கல் பண்டிகை விளையாட்டு போட்டி சுகந்தலையில் சிறப்பாக நடைபெற்றது..
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மாட்டுப்பொங்கலான இன்று அனைத்து பகுதியிலும் விளையாட்டுப் போட்டி நடத்தி மாட்டுப்பொங்கலை சிறப்பாக தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை கிராமத்தில் விளையாட்டு போட்டி நடத்துவதற்காக அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டது. EVLK இளைஞரணி சார்பில் பொங்கல் விளையாட்டு விழா முன்னெடுக்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கி 40_க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் இல்லை என்று சிறுவர்கள் , மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்று தங்களின் தனி திறனை வெளிப்படுத்தினர்.