Categories
சினிமா தமிழ் சினிமா

பொங்கலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரவீனா ரவி… எதற்காக தெரியுமா?…!!!

நடிகையும் பின்னணி குரல் கொடுப்பவருமான ரவீனா ரவி பொங்கல் தினத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம் .

தமிழ் திரையுலகில் படங்களில் நடிக்கும் முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் கொடுப்பவர் ரவீனா ரவி . இவர் நயன்தாரா ,சமந்தா ,அமலாபால், எமி ஜாக்சன் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . இதையடுத்து அனைவரின் பாராட்டை பெற்ற ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்திலும் சமீபத்தில் வெளியான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் .

A Fun Dubbing Session with Raveena & VJ Ashiq | US 45 - YouTube

தற்போது இவர் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர், சிம்புவின் ஈஸ்வரன் மற்றும் ஜெயம்ரவியின் பூமி ஆகிய படங்களுக்காக காத்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் . ஏனெனில் மாஸ்டர் படத்தில்  விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கும் ,ஈஸ்வரன் மற்றும் பூமி படங்களில் நடித்துள்ள நிதி அகர்வாலுக்கும் இவர்தான் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் . இதனால் இந்த மூன்று படங்களின் ரிலீசுக்காக ரவீனா ரவி பொங்கல் தினத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் .

Categories

Tech |