Categories
மாவட்ட செய்திகள்

“பொங்கலோ பொங்கல்” தாறுமாறாக பொங்கல் கொண்டாடிய வெள்ளையர்கள்….!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கிராம பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த வடகடும்பாடி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. . இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அவர்களுக்காக பிரத்தியேகமாக நமது நாட்டுப்புற பாரம்பரிய விளையாட்டுகளான உரியடி, கயிறு இழுத்தல், மாட்டுவண்டி போட்டி,மியூசிக்கல் நாற்காலி போன்றவற்றிவை நடைபெற்றது.

அதில் வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் பங்கேற்க அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதில், சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். மேலும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Categories

Tech |