பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வினியோகம் செய்ய முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் ஊராட்சி மதுரா கவுண்டப்பனூர் கிராமத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
அதன்பின் குனிச்சியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு தயார் செய்யும் பணிகள் மற்றும் பொருட்களின் தரம் குறித்து கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் விநியோகம் செய்ய முன்னேற்பாடு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மொத்தமாக 617 ரேஷன் கடைகள் மூலமாக 3,23, 779 குடும்ப அட்டைதாரர்களுக்கு இவைகள் வழங்கப்பட இருக்கிறது என கலெக்டர் கூறியுள்ளார்.