திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரியில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள வெப்பத்துர் ஏரியில் மணல் கடத்தப்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் பொன்னேரி வருவாய் துறையினரும், திருப்பாலைவனம் பகுதி போலீசாரும் சம்பந்தப்பட்ட மணல் கடத்தல் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது ஏரி பகுதியில் பொக்லைன் மூலமாக, மணல் கடத்தலில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
எனவே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் மணல் கடத்துவதற்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரங்கள், டிராக்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து ,கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரித்த போது வெப்பத்துரை சேர்ந்த 30 வயதுடைய முரளி மற்றும் அகரம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய மாசிலாமணி என்பதும் விசாரணையில் தெரிந்தது. இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த திருப்பாலைவனம் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.