Categories
சினிமா தமிழ் சினிமா

”சாணிக்காயிதம்” படத்தில் பொன்னி கதாபாத்திரம்…. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தில் பொன்னி கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”சாணிக்காயிதம்”.

சாணிக்காயிதம் - கீர்த்தி சுரேஷ் கேரக்டர் வெளியானது | Dinamalar

நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் பொன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தொடக்கம் முதலே இந்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த பொன்னி கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியதாவது, தினமும் இந்த படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு காமெடி காட்சிகளை பார்த்ததாகவும், மேலும், அருண் மாதேஸ்வரன் அனுப்பிய சில காட்சிகளை மட்டும் தன்னுடைய மனதில் வைத்து இந்தக் கதாபாத்திரத்தை தானே டெவலப் செய்ததாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |