விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பொன்னியின் செல்வன் நாயகர்களான ஜெயம் ரவி மற்றும் கார்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் ஹிந்தியில் விக்ரம் வேதா திரைப்படம் கன்னடத்தில் கண்டாரா திரைப்படம் இத்திரைப்படத்திற்கு போட்டியாக இருக்கின்றது.
இந்த நிலையில் விக்ரம் வேதா திரைப்படத்திற்கு பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஹீரோக்களான கார்த்தி மற்றும் ஜெயம் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். இதற்கு விக்ரம் வேதா திரைப்படத்தின் இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரி நன்றி தெரிவித்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்கள். தற்போது தெலுங்கில் வெளியாகி உள்ள விக்ரம் வேதா திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை என பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.