தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என்று கருதும் அளவிற்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை மணிரத்தினம் இயக்க, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் தற்போது வரை 250 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததால், கூடிய விரைவில் 500 கோடி வசூலை எட்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மணிரத்தினத்திடம் பெரிய பழுவேட்டையார் வேடத்தில் நான் நடிக்கட்டுமா என்று கேட்டிருக்கிறார்.
ஆனால் மணிரத்தினம் பல கதாபாத்திரங்கள் இருக்கும் ஒரு படத்தில் ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரை கொண்டு வந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறி ரஜினியின் கோரிக்கையை நிராகரித்து விட்டார். ஆனால் தற்போது நாவலை படித்துவிட்டு படத்தை பற்றி விமர்சிக்கும் ரசிகர்களும் பெரிய பழுவேட்டையார் வேடத்தில் ரஜினியே நடித்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். அதாவது பெரிய பழுவேட்டையார் வேடத்தில் சரத்குமார் நன்றாக நடித்து இருந்தாலும், ரஜினிகாந்த் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் நாவலை படித்து விட்டு படம் பார்க்க சென்றவர்களுக்கு படம் அந்த அளவுக்கு திருப்தி இல்லை என்று இணையத்தில் கருத்துக்கள் வந்தாலும், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலைமோதி கொண்டுதான் இருக்கிறது.