இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் குறித்து பிரபலத்தின் கருத்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் குறித்து ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, “ஒரு கதை பெரிய திரையில் பிரம்மாண்டமாக காட்டியதற்கு பெருமைப்பட வேண்டும். பொன்னியின் செல்வன் மக்களை தங்களது சொந்த வரலாற்றை திரையில் காட்டி இருக்கின்றது. இந்த திரைப்படம் ஆரோக்கியமான விவாதங்களை உருவாக்கி இருக்கின்றது. இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் மணிரத்தினம் உயர்ந்து நிற்கின்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.
மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, திருடா திருடா, அலைபாயுதே மற்றும் ஓகே கண்மணி என மணிரத்தினம், பிசி ஸ்ரீராம் இணைந்து தமிழ் சினிமாவில் புது திரை மொழியில் கதை சொல்லி கவனம் ஈர்த்துள்ளார்கள். “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இதுவரை ரூ. 450 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படத்தை தயாரித்துள்ள லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழக அளவில் அதிகம் வசூலித்த படங்களில் “பொன்னியன் செல்வன்” முதல் இடத்தில் இருக்கின்றது. இதன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு சம்மரில் திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.