Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசிக்கும் திரிஷா… வெளியான புகைப்படம்…!!!

இயக்குனர் மணிரத்னம் படத்திற்காக நடிகை திரிஷா ‘பொன்னியின் செல்வன்’ நாவலை வாசித்து வருகிறார் .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது . இந்த படத்தில் விக்ரம் ,கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா ,ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் . இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்றது ‌. இதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது .

 

சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் ஹைதராபாத் சென்றிருந்தார் . இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் நாவலை வாசித்து வருவதாக தெரிவித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை நடிகை திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .

Categories

Tech |