Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் “சோழா சோழா” பாடல்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி மிகப் பெரிய வரலாற்று சாதனையை படைத்து வரும் படம்தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்து வருகிறது. பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படம் முதல் வாரத்தில் தமிழகத்தில் மட்டும் ரூபாய்.200 கோடியை வசூல் செய்து இருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே வெளியாகிய முதல் வாரத்தில் 200 கோடியை வசூலித்த முதல் திரைப்படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் படம் உலக அளவில் ரூபாய்.400 கோடியை தாண்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ரசகர்களின் பேவரட் பாடலான சோழா சோழா பாடலின் வீடியோவை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவாகிய இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |