இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் UK-வில் மட்டும் ரூ. 11 கோடி வசூல்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வசூலை குவித்து வருகின்றது.
மேலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது UK-வில் மட்டும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம் அதன்படி £1.24M அதாவது இந்திய மதிப்பின் படி ரூ. 11 கோடி வசூலை குவித்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.