Categories
சினிமா

“பொன்னியின் செல்வன் படம்”…. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு?… வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் புகழ் பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் தற்போது பிரம்மாண்டமாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமாக உருவாகி 2 பாகங்களாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் சேர்ந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன், நந்தினி, குந்தவை, பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி, சுந்தர சோழர், பூங்குழலி ஆகிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரகாஷ் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி போன்றோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசை அமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகளாக டப்பிங், பாடல்கள் மற்றும் பின்னணி இசை கோர்ப்புக்கான வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பார்த்திபேந்திர பல்லவன் எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் பிரபு பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக தனது டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆகவே தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |