பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்று உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்துள்ளது. அந்த பகுதியில் சுந்தரமகாலிங்கம் கோவில் இருக்கின்றது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் பெய்த மழையின் காரணத்தினால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருதது. இதனால் பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.