உத்திரப்பிரதேச மாநிலத்தில் இரவு பூஜைக்கு வருமாறு அழைத்து மந்திரவாதி ஒரு பெண்ணை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் பில்லி சூனியம் வைப்பதற்காக நரேந்திரா என்ற மந்திரவாதியும், அவருடன் சந்தீப் தோமர் என்பவரும் வந்துள்ளார். அவரை அழைத்து பலரும் பூஜை செய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணிடம் பூஜைக்காக இரவு தன்னை வந்து பார்க்குமாறு அவர் கூறியுள்ளார். அதனையும் நம்பி இரவில் அந்த பெண் மந்திரவாதியை பார்க்க சென்றுள்ளார்.
அப்போது வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை கற்பழித்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் மந்திரவாதியின் உதவியாளர் சந்தீப் தோமரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மந்திரவாதி தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.