Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லேடி சூப்பர் ஸ்டாருக்கு இணையாக பூஜா ஹெக்டே…. உயர்த்திய சம்பளம்…. எவ்வளவு தெரியுமா…?

நடிகை பூஜா ஹெக்டே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வாங்கும் சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.

பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட்டாகி வருகிறது.

அந்த வகையில் இவர் தற்போது 2 ஹிந்தியில் படங்களிலும், 2 தெலுங்கில் படங்களிலும், தமிழில் தளபதி65 படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படி பிசியான நடிகையாக வலம்வரும் பூஜா ஹெக்டே தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா வாங்கும் சம்பளத்திற்கு இணையானது என்று கூறப்படுகிறது.

Categories

Tech |