நடிகை பூஜா ஹெக்டே தன் அம்மாவை முதல்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இதை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் அவர் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிகை பூஜா ஹெக்டே தற்போது ‘தளபதி65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது அம்மாவை முதல்முறையாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் அவர் தன் அம்மாவை கட்டியணைத்தபடி எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.