Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

லேடிஸ் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக சம்பளத்தை உயர்த்திய பூஜா ஹெக்டே…. எத்தனை கோடி தெரியுமா..?

நடிகை பூஜா ஹெக்டே லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகை நயன்தாரா ஒரு படத்திற்காக 4கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பூஜா ஹெக்டே நயன்தாராவின் சம்பளத்திற்கு இணையாக தனது சம்பளத்தை திடீரென உயர்த்தி உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

அதன்படி நடிகை பூஜாஹெக்டே இதுவரை தான் நடிக்கும் படத்திற்கு 2 கோடி முதல் 3 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். தற்போது அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்துவரும் பீஸ்ட் படத்திற்காகவும் அவர் 3 கோடி வரைதான் சம்பளம் வாங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு தெலுங்கு மற்றும் பிறமொழிகளில் படவாய்ப்புகள் அதிகரித்து வருவதால் அவர் தனது சம்பளத்தை ரூ 3.5 கோடியாக உயர்த்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |